follow the truth

follow the truth

April, 7, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

Published on

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுகின்ற செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்போம்.

கொள்கைகளை வகுத்தல், மற்றும் செயற்படுத்தல், கண்காணித்தல், குறைகளைக் கண்டறிதல் போன்ற கொள்கை வட்டாரம், சரியான முறையில் செயல்படுகின்றதா? என்கின்ற பிரச்சினை காணப்படுகின்றது.

கொள்கை தயாரிப்பில் தரவுகளையும் சாட்சிகளையும் மையப்படுத்தி, அறிவியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு பதிலாக அவசரமாக முன்னெடுக்கப்படுகின்ற விடயமாக மாறி இருக்கிறது. இந்த முறையில் இருந்து வெளியேறி முன்னேற்றகரமான சமூகமாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதோடு, இலவச சுகாதாரம் என்கின்ற நாமத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலவச சுகாதார சேவை கிடைக்கப் பெற்றதா என்று பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். தற்பொழுது இலவச சுகாதார சேவை காணப்பட்டாலும் அது இலவசமாக வழங்கப்படுகின்றதா என்கின்ற பிரச்சினை உண்டு. சுகாதாரத் துறையில் சிக்கல்கள் காணப்படுகின்றமையால் அவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(06) இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் சுகாதாரத் துறையில் திறமையானவர்கள் இருப்பதனால் உலக நாடுகளில் அதிக கேள்வி இருக்கின்றது. எனவே சிந்தனையை சிதறவிடாமல் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது குறித்து யோசிக்க வேண்டும். வங்குரோத்தடைந்த நாடொன்றில் ஒருமித்த சிந்தனையோடு இருப்பது மிகவும் சிரமமானது. அரசாங்கத்தில் வளங்களும் ஆளுமையும் காணப்படுகின்றன. இவற்றை ஊக்கமாகக் கொண்டு செயற்பட்டு வளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றுலா துறையை இணைத்துக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தொழில் முனைவோர்களை மேம்படுத்தி சுகாதார கட்டமைப்பை வளங்களின் ஊடாக விருத்தி செய்து, அவசர நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் அவ்வாறான அவசர நிலை உருவாகியது. 1800 களிலும் சட்டமொன்றின் மூலம் அவ்வாறு செயல்பட்டிருக்கின்றது. அதனால் காலத்திற்கு பொருத்தமான வகையில் அனைத்தும் தயார் செய்யப்பட வேண்டும். மக்களுக்கு பொறுப்புக் கூறுகின்ற பொறுப்பு ஏற்கின்ற சுகாதாரத் துறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

எங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது – இஷாம் மரிக்கார் (VIDEO)

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை...