அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது
அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.