நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பல் போக்குவரத்தானது நேற்று(05) திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை வந்தடைந்த கப்பல், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில், கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மையினால் குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டது.