பங்களாதேஷில் போராட்டத்தின் பின்னர் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தின் கீழ், நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஆடைத் தொழில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.
இந்த ஆண்டு நாட்டின் ஆடை ஏற்றுமதி இருபது சதவீதம் குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் தற்போது காபந்து அரசாங்கத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வருகின்ற போதிலும், நாட்டில் வன்முறைகள் தொடர்கின்றன.
பங்களாதேஷ் தனது ஏற்றுமதி வருவாயில் எண்பது சதவீதத்தை ஆடை ஏற்றுமதியில் இருந்து ஈட்டுகிறது.
இதற்கிடையில், சம்பள உயர்வு கோரி தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக அறுபது ஆடை தொழிற்சாலைகள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் அந்த தொழிற்சாலைகளை ஆபிரிக்க பகுதி அல்லது சந்தைகளுக்கு மாற்ற தயாராக உள்ளனர்.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து எட்டு பில்லியன் டாலர் கடனைக் கோரியுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால், மூன்று பில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்தும் அபாயம் உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையால் அதிகமான பொருட்களை சேகரிக்க சிலர் அக்கறை காட்டுவதால், சில பகுதிகளில் மருந்து, எரிபொருள், அத்தியாவசிய உணவு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.