follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுநாமலுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 13ஆம் திகதி விசாரணைக்கு

நாமலுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 13ஆம் திகதி விசாரணைக்கு

Published on

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று(05) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டிற்கான விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்புக்கு 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல்...

சீன ஜனாதிபதி – அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு...