அரச உத்தியோகத்தர் முதுகெலும்புடன் நிமிர்ந்து வேலை செய்ய வேண்டுமாயின் அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஐக்கிய லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களை தமது தொழில் கௌரவத்தைப் பேணிக் கொண்டு நேர்மையாகப் பணியாற்ற இடமளிக்காத அரசியல் சக்திகள் இன்று எங்கும் காணப்படுவதாக ஜனக ரத்னாயம தெரிவித்தார்.
“இந்த நிலையிலிருந்து விடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக அரசு சேவையில் ஈடுபடுவதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். தேவையான சட்டவிதி அல்லது பிற விதிகளில் தடைகள் இருந்தால், அவற்றை அகற்றி, பொது சேவையை விட பரந்த சூழல் உருவாக வேண்டும்..”