follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1சம்பளம் அதிகரிப்பு - தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல

சம்பளம் அதிகரிப்பு – தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல

Published on

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல எனவும், அதற்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப் பட்டதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த யோசனையை கடுமையாக நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் எவ்வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விடுமுறை

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக்...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக...

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை – துப்பாக்கிதாரி தடுப்புக்காவலில்

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...