அரசாங்கத்தினால் பரப்பப்படுகின்ற வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“.. சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகி வருகின்றது.
இதனை அறிந்து ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என கூறுகின்றனர்.
இது நடைபெறாத ஒரு விடயமாகும். இவ்வாறான கருத்துக்களுக்கு பொது மக்கள் ஏமாற்றமடையக் கூடாது.
2019ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவின் வெற்றியை முறியடித்த ராஜபக்ஷ தரப்பினருடன் இணைந்துள்ள தரப்பினரே இன்று இவ்வாறான கருத்துக்களை முன்வைகின்றனர்..” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகளுக்காகக் கடந்த 3 வருடங்களில் 3 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.