follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP1அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு - பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு – பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

Published on

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாகவும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்ற திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் உதய ஆர். சேனவிரத்ன தெரிவித்தார்.

அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு அரச மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களை உள்ளடக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 ஜூன் 12ஆம் திகதி அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டது.

குழுவிற்கு 03 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்ப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 18 விடயப்பரப்புக்களின் கீழ் அரச சேவைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு கொள்கைகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கடந்த பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது, ​​அரச ஊழியர்கள் கடுமையான வாழ்க்கைச் சுமை பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டனர்.

எத்தகயை பிரச்சனைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தமது பணிகளைச் சரியாகச் செய்தனர். அதன் காரணமாக, 2023ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி உயர்வடைந்து, பொருளாதாரம் வலுப் பெற்றது.

2023 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தில், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். 2024 இல் பொருளாதார வளர்ச்சியுடன், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தினோம்.

அதற்கான அறிக்கையை உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய உறுப்பினர்கள் எமக்கு வழங்கியுள்ளனர். அதனை செயற்படுத்தும் பொறுப்புகள் நிதி அமைச்சிடம் கையளிக்கப்படும்.

இதனால் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய அனைவருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியுமென நம்பும் அதேநேரம், உதய ஆர். செனவிரத்ன குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிகிறேன்.” என்றார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள்

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தில்...