அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான விளம்பரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது, விளம்பரங்களுடன் காணப்படும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றும் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படலாம். எனவே பொலிஸாரின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், வாகன உரிமையாளர்கள் தானாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.