follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

Published on

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு 5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு

முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு

ஆசியர்களுக்கு 17,480 – 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு

கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு

நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு

பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு

பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு

வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு

வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்

அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...