follow the truth

follow the truth

January, 15, 2025
Homeலைஃப்ஸ்டைல்சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..

சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..

Published on

தற்போதைய நவீன உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் புற்றுநோய் செல்கள் வரும் இடத்தைப் பொறுத்து அறிகுறிகளை வெளிக்காட்டும். சில சமயங்களில் அறிகுறிகள் தெரியாமலும் இருக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அது நமக்கு பல அறிகுறிகளை உணர்த்தும்.

அதுவும் அந்த அறிகுறிகளானது தினசரி சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளைப் போன்று தான் இருக்கும். அதை கவனித்து சிகிச்சை எடுத்தால், ஆரம்பத்திலேயே புற்றுநோயைத் தடுக்கலாம். அதற்கு முதலில் ஒருவர் அவரது உடலை கவனிக்க வேண்டும். ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட அறிகுறிகள் தொடர்ந்து தெரிந்தால், அசால்ட்டாக இருக்காமல் மருத்துவ உதவி உடனே நாட வேண்டும்.

சில நேரங்களில் புற்றுநோயின் அறிகுறிகள் ஒருவர் சாப்பிடும் போது கூட தெரியலாம். அதுவும் இப்படி சாப்பிடும் போது ஒருவர் அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிப்ளக்ஸ் பிரச்சினையை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது புற்றுநோயின் ஒருவகையான கணைய நோயின் அறிகுறியாக இருக்கலாம். யார் ஒருவர் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறார்களோ, அவர்களுக்கு கணைய புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் தான் கணையப் புற்றுநோய். இது மிகவும் ஆபத்தான புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த வகை புற்றுநோயால் இறக்கிறார்கள். இந்த கணைய புற்றுநோயின் அறிகுறிகள் தினசரி சந்திக்கும் செரிமான பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், பலரும் அதை புறக்கணிப்பதுண்டு. இதனாலேயே இந்த வகை புற்றுநோயை கொண்ட பலரும் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுகிறார்கள். இப்போது ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், சாப்பிடும் போது எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பதைக் காண்போம்.

உணவை விழுங்க முடியாமை
உணவை உண்ணும் போது, அந்த உணவை விழுங்க முடியாமல் தொண்டையில் வலி அல்லது அசௌகரியம் மற்றும் நெஞ்சு பகுதியில் உணவு சிக்கிய மாதிரியான உணர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இம்மாதிரியான அறிகுறிகளை சந்தித்துள்ளனர். மேலும் இந்த அறிகுறியானது படிப்படியாக மோசமடைந்து, உணவை விழுங்கும் போது வலி அதிகரிக்கும். உணவுக்குழாய் புற்றுநோயானது ஒருவரது தலை, கழுத்து, வாய் மற்றும் தாடையை பாதிக்கலாம். அதுவும் கட்டிகளின் வளர்ச்சியைப் பொறுத்து, அது இந்த பகுதிகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தலாம்.

அஜீரண கோளாறு
அஜீரண கோளாறு ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இது புற்றுநோயால் மட்டுமே ஏற்படாது. இருப்பினும், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பகுதியில் எரிச்சல், வயிறு வீக்கம், வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை போன்றவை தொடர்ந்து நீடித்திருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது உணவுக்குழாய் புற்றுநோய் காரணமாக இருக்கலாம்.

விரைவில் வயிறு நிரம்புவது
சிறிதளவு உணவு உட்கொண்டாலே வயிறு நிரம்பிய உணர்வை உணர்ந்தால், அதுவும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் வயிற்று புண்கள், குடல் அழற்சி நோய்க்குறி, பசியின்மை போன்றவை கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குமட்டல் மற்றும் வாந்தி
நீங்கள் சாப்பிட்டதும் அல்லது சாப்பிடும் போது குமட்டல் அல்லது வாந்தியை உணர்ந்தால், பலரும் அதை ஃபுட் பாய்சனாக கருதி விட்டுவிடுகின்றனர். ஆனால் இதை ஒருவர் நீண்ட நாட்களாக காரணமின்றி சந்தித்து வந்தால், அது கணைய புற்றுநோய், வயிற்று புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகளின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குடலியக்கத்தில் மாற்றம்
நல்ல ஆரோக்கியமான உணவு குடலியக்கத்தை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் உடலில் பிரச்சனை இருப்பின், அது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது மலத்தின் நிலைத்தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக ஒருவர் உணவு உட்கொண்டதும் மலம் கழிக்க சென்றால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது கணைய புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக்...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய...