follow the truth

follow the truth

November, 22, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநான் வாய்ச்சொல் தலைவர் அல்ல - திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

நான் வாய்ச்சொல் தலைவர் அல்ல – திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு

Published on

கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரமுடைய மூடையை 5000 ரூபாவிற்கும், கிருமி நாசினிகளையும், கலைக் கொல்லிகளையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 28 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(30) அநுராதபுரம் மதவச்சிய நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

QR CODE முறையில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சாரதிகளுக்கும், சக்தி திட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.

விவசாயிகளின் உற்பத்திகளுக்கும், நெல்லுக்கும் நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நுகர்வோரையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள அரிசி மாபியாக்கள் விவசாயிகளை அசெளவுகரியத்துக்கு உட்படுத்தியுள்ளதோடு, செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரிசி மாபியாவுக்கு தடைவிதித்து, விவசாயிகளை ஆட்சி பீடம் ஏற்றுவோம்.

துன்பத்தில் இருக்கின்ற விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாய கடன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் விவசாய கடன்களை முழுமையாக இரத்து செய்வோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம், மூச்சு போன்ற செயற்பாட்டின் ஊடாக ஒரு பில்லியன் பெருமதியான வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் கோடீஸ்வரர்கள் செல்வந்தர்களதும் கடன்களை இரத்து செய்துள்ளது. விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய முடியாமல் போயுள்ளது. விவசாயிகள் ஒவ்வொரு போகத்திலும் வேளாண்மை செய்கின்ற போது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றது. எனவே விவசாயிகளின் உற்பத்திகளை பாதுகாத்து அவற்றுக்கு நிர்ணய விலை ஒன்றை வழங்கி முறையான விற்பனை விலையை பெற்றுக் கொடுப்போம்.

தற்போதைய அரசாங்கமும் மாற்று அரசியல் சக்திகளும் இந்த விவசாயிகளை சுமையாக கருதுகின்றனர். கமநல சேவை மத்திய நிலையங்களை தீக்கிரையாக்கியவர்களால் விவசாயிகளை வளப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தின் பால் விவசாயிகளை ஈடுபடுத்தி, டிஜிட்டல் முறைப்படி பூரணப்படுத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவோம். விவசாயிகளுக்கு செய்ய முடியுமான அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி அதை இந்த மண்ணின் யதார்த்தமாக மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் தொழில் இல்லாத பட்டதாரிகள் அதிகமானோர் இருக்கின்றார்கள். கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்தத் தொகை குறிப்பிடப்பட்டிருந்தாலும், சரியான தொகை என்னவென்று யாருக்கும் தெரியாது. தான் பல மாவட்டங்களில் உள்ள தொழில் வாய்ப்பில்லாத பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினேன். பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க வேண்டிய முறையை தான் சரியான விதத்தில் செயற்படுத்துவேன்.

அவர்களுக்கு விருப்பமான துறையை தெரிவு செய்வதோடு, இல்லை என்றால் தொழில் முயற்சியை தேர்வு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு அரச மற்றும் தனியார் தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவோம். பட்டதாரிகளின் தகுதி மற்றும் விருப்பம் என்பனவற்றிற்கு அமைய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

எமது நாடு கட்டியெழுப்பப்படும் விதம் குறித்து அனைவருக்கும் வெற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் போசாக்கு கொள்கை, பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐக்கியமான நாட்டில் அனைவருக்கும் வெற்றி தேர்தல் விஞ்ஞாபனம் கிடைக்கப் பெற்ற பின்னர், அதனை வாசித்துப் பார்க்குமாறும் கோட் அணிந்த வாய்ச்சொல் தலைவர்களைப் போலல்லாது, சேவை செய்கின்ற தலைவராக இருப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“என்னை சஜித் பிரேமதாச அழைத்தார் சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்” – ரஞ்சன்

என்னை சஜித் பிரேமதாச அழைத்தார் சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இன்று...

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த எம்.பி.யின் பதவி இழக்கப்படும்?

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்...

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித்...