follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2சஜித்திடம் இருந்து முட்டை உற்பத்திக்கான கொள்கை திட்டம்

சஜித்திடம் இருந்து முட்டை உற்பத்திக்கான கொள்கை திட்டம்

Published on

உற்பத்திகளின் போது இரண்டு பிரதான தரப்பினர் இருக்கின்றார்கள். அவற்றுள் நுகர்வோர்கள் 220 இலட்சம் பேரும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள். தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் விதம் குறித்து சிந்திக்க வேண்டும். அதற்காக தேசியக் கொள்கை திட்டமொன்று அவசியப்படுவதோடு, தான் வெற்றி பெற்ற உடனே அந்தக் கொள்கை திட்டத்தை தயார் படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த தேசியக் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நுகர்வோர், உற்பத்தியாளர் அரச மற்றும் தனியார் துறை என அனைத்து பிரிவினரையும் வெற்றி பெறச் செய்யும் விதத்திலான தேசிய கொள்கை திட்டம் ஒன்றிற்கு நாம் செல்ல வேண்டும். இதன் போது யாரும் தோல்வியடையாமல் அனைவரும் வெற்றிபெற முடியுமான விதத்தில் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஹெட்டிபொல, படுவஸ்நுவர பிரதேச முட்டை உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இன்றைய (30) தினம் கலந்துரையாடினார். 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் நிமித்தம் அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் வெற்றிப் பேரணிகளில் பங்கேற்கும் விஜயத்தின் போதே அவர் இவ்வாறு சந்தித்து கலந்துரையாடினார். இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலப் பொருட்களின் விலை உள்ளீட்டு பொருட்களின் விலை உற்பத்திக்கான செலவு என்பனவற்றின் ஊடாக தமக்கு இந்த வியாபாரத்தில் கிடைக்கின்ற பிரதிபலன் குறித்து சிந்திக்க வேண்டும். குறைந்த விலையில் சிறந்த தரத்திலான பொருட்களையே நுகர்வோர் எதிர்பார்க்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தமது வறுமையை போக்கும் வேலைத்திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, ஏற்றுமதி, மற்றும் முதலீடு ஆகிய ஐந்து திட்டங்களின் ஊடாக 24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வறுமையான குடும்பங்களுக்கு வழங்குவோம். வறுமையைப் போக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக முட்டை உற்பத்தி பயனுள்ளதாக அமையும். தேசிய போசணைக் கொள்கை திட்டத்தின் ஊடாக போஷாக்கான சமூகம் ஒன்றையும், பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு வழங்கும் திட்டமொன்றையும் ஏற்படுத்துவோம். இதன் ஊடாக முட்டைய உற்பத்தியாளர்களின் முட்டைகளுக்கான கேள்வியும் அதிகரிக்கும். வழமையான பழமைவாத சிந்தனையோடு இல்லாமல் செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

முட்டை உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு பெருமளவில் செலவழிக்க வேண்டியமை மற்றும் பராமரித்தல் என்பனவற்றுக்கு தேசிய உற்பத்திகள் ஊடாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். தேசிய ரீதியில் மூலப் பொருட்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்ற போது அந்நிய செலாவணியை சேமிக்க முடியும். இவற்றை முன்னெடுப்பது சிரமமாக இருந்தாலும் தேசியக் கொள்கை திட்டத்தின் ஊடாக இலக்கை அடையக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இவற்றை செயற்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதியின் போது போட்டித் தன்மை காணப்பட வேண்டும் என்பதோடு உற்பத்திக்கான செலவை குறைப்பதும் முக்கியமானதாகும். தற்பொழுது வாழ்க்கைச் செலவை கணிப்பிடும் குழு இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. அதனை மீண்டும் செயல்படுத்துவதன் ஊடாக உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பில்லாத நியாயமான விடயங்களை முன்னெடுக்க முடியும். தற்பொழுது நினைத்தவாரெல்லாம் வர்த்தமானிகள் வெளியிடப்படுகின்றன. இவை தொடர்பில் சரியாக ஆராய்ந்து செயற்பட வேண்டும். அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றாக இணைத்து குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி துறைகள் நிறுவப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...