follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுரணிலின் ரீட் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணை!!

ரணிலின் ரீட் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணை!!

Published on

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அபேரத்ன மற்றும் டி. எம். சமரகோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை ஜனவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார்,...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...