follow the truth

follow the truth

September, 17, 2024
Homeவணிகம்சந்தையில் இணை இறக்குமதி பொருட்களால் இலங்கையின் வரி வருவாய்க்கு அச்சுறுத்தல்

சந்தையில் இணை இறக்குமதி பொருட்களால் இலங்கையின் வரி வருவாய்க்கு அச்சுறுத்தல்

Published on

அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நுகர்வோரிடையே காணப்படும் குறைந்த விலை தொடர்பான மயக்கம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஆபத்தில் தள்ளும் ஒரு சிக்கலான யதார்த்தத்தை ஏற்படுத்துகிறது.

வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் அனுமதியின்றி, அந்த வர்த்தகநாம தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நடைமுறையானது, உத்தியோகபூர்வமற்ற சந்தை அல்லது இணையான இறக்குமதி என அழைக்கப்படுகிறது. வரி வருமானம் மற்றும் அந்நியச் செலாவணியில் கணிசமான இழப்புகளுக்கு இது வழிவகுகின்றது. இந்த பரிவர்த்தனைகள் இரகசியமாக இடம்பெறுவதன் காரணமாக இதன் நிதி தாக்கம் மதிப்பிட முடியாத வகையில் இருக்கும் அதே வேளையில், இலங்கையின் பொருளாதாரத்தின் இக்கட்டான நிலையை மேலும் அதிகரிக்கும் வகையிலான அதன் விளைவுகள் பயங்கரமானவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையான இறக்குமதி சந்தைப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலைகளுடன் போட்டியிட முடியாமல், உத்தியோகபூர்வமான வணிகங்கள் ஒரு பாதகமான நிலையை எதிர்நோக்குகின்றன. இந்த பொருட்களின் இறக்குமதியானது, சட்டபூர்வமான வழிகளைத் தவிர்த்து, சுங்க வரி உள்ளிட்ட வரி அறவீடுகளைத் தவிர்த்து நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால் அவை குறைந்த விலையில் விற்கப்பதுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும். இதனால் இது ஒரு வளைந்த சந்தையை உருவாக்குவதால், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் நிலைப்பைத் தக்கவைக்க போராடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கிடைக்கும் சிறிய சேமிப்பின் மூலம் நுகர்வோர் சந்தோசமடைந்தாலும், நீண்ட கால பாவனையின் போது அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இணை இறக்குமதி சந்தை தயாரிப்புகள் பெரும்பாலும் உத்தரவாதங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவைக் கொண்டிருப்பதில்லை என்பதால் ஏதேனும் சிக்கல்கள் எழும் நிலையில் கொள்வனவாளர்களுக்கு ஒரு சில விடயங்களை மேற்கொள்ள முடியாமல் போகும் நிலை ஏற்படும். இதனை தடுப்பதற்கென ஒழுங்குமுறைகளை அமுலாக்குதல், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உத்தியோகபூர்வ வணிகங்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த இறக்குமதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு விரிவான மூலோபாயத்தின் அவசியத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

நாட்டின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் நியாயமான சந்தையை உறுதி செய்வதற்கும் இது தொடர்பான அவசர நடவடிக்கை அவசியமாகும். இணையான இறக்குமதிச் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிகள் ஒரு மீளெழுச்சி மற்றும் நியாயமான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். இணையான இறக்குமதி சந்தை தயாரிப்புகளின் குறுகிய கால நன்மைகளை வழங்கும் என தோன்றினாலும், அதன் நீண்ட கால விளைவுகள் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாடு ஒரு குறுக்கு வழியை நோக்கிச் செல்வதனால், இணை இறக்குமதி சந்தைக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகள் நிலையான மற்றும் நிலைபேறான பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்பாடு குறித்த தெளிவுபடுத்தல்

மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் மேம்பாடு தொடர்பில் முறையற்ற பரிவர்த்தனையொன்று இடம்பெற்றுள்ளதாக மறைமுகமாக குற்றஞ்சுமத்தும் வகையில் சமீபத்தில்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த...

உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 சந்தைக்கு

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த...