follow the truth

follow the truth

April, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாSLFP பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

SLFP பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

Published on

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து வருகின்றனர்..

களுத்துறைத் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்ட, முன்னாள் பிரதி அமைச்சரும், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரியங்கனி அபேவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா தொகுதியின் பிரதான அமைப்பாளர் எஸ்.டி. பண்டாரநாயக்கவின் பேரன், பண்டு பண்டாரநாயக்கவின் மகன்,பிரவீன் டயஸ் பண்டாரநாயக்க, கொலன்ன தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சாந்த ரத்நாயக்க, ரக்வான தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் உபாலி சந்திரசேன, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அனுர முனசிங்க, தெனியாய தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சாகர சுரேன் எதிரிவீர, பொத்துவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் விஜயமுனி நிபுண சொய்சா, களனித் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் திலக் வராகொட, லக்கல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் அசித வேகொடபொல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சமில டி சில்வா ஆகியோர் இன்று (26) முற்பகல் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திற்கு வந்து ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அறிவித்தார்கள்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை கருத்திற்கொண்டு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றியதாதாக சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, கட்சி, நிற பேதமின்றி எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் நின்று தவித்துள்ளதாகவும், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உண்மையை மறைத்து பொய்யை விதைத்தாலும் நாட்டு மக்கள் தற்போது உண்மையை உணர்ந்து கொண்டுள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது

கடந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய நடவடிக்கைகள் காரணமாக அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது என்று கைத்தொழில் மற்றும்...

எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா சாமர சம்பத் கைதானார்? – ரணில்

அரசியல் கைதியாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்...

களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை எமது அரசு அமைக்கும் – நளின் ஹேவகே

களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின்...