follow the truth

follow the truth

April, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவிவசாய மக்களுக்கு சஜித் பிரேமதாச அழைப

விவசாய மக்களுக்கு சஜித் பிரேமதாச அழைப

Published on

விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய இரசாயன மருந்துகள், உரம் என்பனவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, இருட்டடிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது, மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமான விலைக்கு பொருட்கள் வழங்கப்படும். உர வினியோகத்தின்போது கம நல சேவைகள் மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

QR Code முறையை மையப்படுத்தி விவசாயிகளுக்கு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து சேவையாளர்களுக்கு, ஆலையுரிமையாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா அச்சுறுத்தல், உர மோசடி, நானோ உர மோசடி போன்றவற்றின் ஊடாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டும் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, கிடைக்கின்ற பணத்தை கொண்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் அடிக்கு மேல் அடி விழுந்து அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவ்வாறு அழுத்தங்களுக்கு உள்ளாகி மூன்று வேலையும் உணவு உண்ண முடியாமல் இருக்கின்ற விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலை ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மோசடியான முறையில் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் பாதிக்கின்ற ஏற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

நுகர்வோருக்கும் சாதாரண விலையில் பொருள் கிடைப்பதோடு நெல்லுக்கும் உயர்ந்த நிர்ணய விலை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (25) பொலன்னறுவை, ஹிங்குராங்கொட நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பிணைகள் இன்றி அரச வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ள செல்வந்தர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு நட்புறவைப் பேணி அந்தக் கடன் தொகைகளை இரத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கு உணவளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி உணர்வாக இந்தக் கடன்களை இரத்து செய்வோம். இந்த சிறிய மனிதர்களின் ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பணியை நிறைவேற்றுவேன். நாட்டுக்கு உணவு அளிக்கின்ற விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...

“இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...