follow the truth

follow the truth

April, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதம்மிக்க பெரேரா நிறைய பணத்துடன் வந்தார் - பணத்திற்காக பசில் பேராசையுடன் உழைத்தார்

தம்மிக்க பெரேரா நிறைய பணத்துடன் வந்தார் – பணத்திற்காக பசில் பேராசையுடன் உழைத்தார்

Published on

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, படுதோல்வி அடைவார் என நுவரெலியா மாவட்டக் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன கூட்டுறவு விழா மண்டபத்தில் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதியின் கூட்டுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரான. தம்மிக்க பெரேரா பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாராகி, அந்த பணத்திற்காக பசில் ராஜபக்ஷ பேராசையுடன் உழைத்தார்.

இத்தேர்தலுக்கு நாமல் ராஜபக்ச சரியானவர் அல்ல என தாம் தெரிவித்ததையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து, தேர்தலில் தோற்க விரும்பவில்லை என தொழிலதிபர் தம்மிக்க பெரேரா விலகிக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக...

இன்னும் கொஞ்ச நாளில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள்...

சதுரங்க அபேசிங்க கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு

தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களுக்கு சமூக ஊடகங்களில் அவதூறு செய்யப்பட்டதாகக் கூறி,...