follow the truth

follow the truth

April, 7, 2025
Homeஉலகம்ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து

ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து

Published on

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் இரத்துச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் 400 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் பங்களாதேசில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்களை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்பிக்கள் அனைவரது பாஸ்போர்ட் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாட்கள் கால அவகாசம் வழங்கிய டிரம்ப்

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு...

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பபுவா நியூகினியாவில் கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில்,...

அமெரிக்க ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரி

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ​பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக...