follow the truth

follow the truth

April, 26, 2025
Homeவிளையாட்டுஇங்கிலாந்து அணி 23 ஓட்டங்களால் முன்னிலையில்

இங்கிலாந்து அணி 23 ஓட்டங்களால் முன்னிலையில்

Published on

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் மிலான் ரத்னாயக்க 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி சார்பாக Chris Woakes மற்றும் Shoaib Bashir ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய தினம் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அவ்வணி சார்பில் Jamie Smith ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், Harry Brook 56 ஓட்டங்களையும் மற்றும் Joe Root 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அசித பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய, இலங்கை அணியை விட 23 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...