follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பாஃப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம்...