ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பதிவான 707 வாக்குகளில் ஒலாப் ஸ்கோல்ஸ் 395 வாக்குகளைப் பெற்று புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த 16 வருடங்களாக தொடர்ச்சியாக ஜேர்மனின் அதிபராக பதவி வகித்த அங்கெலா மேர்க்கலின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.