எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே மேடையில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரும் ஒன்றாக விரைவில் சந்திப்பார்கள்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பாஹியங்கல தேரர் குரல் கொடுத்து வந்தவர்.
வில்பத்து பகுதியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தொடர் விசாரணைகளின் பிற்பாடு தீர்ப்பளித்திருந்தது.
அத்தோடு, ரிசாத்தின் தனிப்பட்ட செலவில், குறித்த பகுதியில் மீண்டும் வனநிலப்பரப்பை உருவாக்குமாறும் அங்கு மரங்களை நடுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இருந்தது.
சில சமயங்களில் மத வாதம் இனவாதம் எனப் பேசிய குறித்த தேரர், வில்பத்து தொடர்பில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த காலகட்டத்தில் தனியார் தொலைகாட்சியான ‘ஹிரு’ சலகுன நிகழ்ச்சியில் பாஹியங்கல தேரர் மற்றும் ரிஷாத் பதியுதீன் திறந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதில் விவாத இறுதிக் கட்டத்தில் பாஹியங்கல தேரர் முஸ்லிம்களின் புனித குர்ஆனை முன்வைத்து ரிஷாதிடம் தான் வில்பத்து காடழிப்பு செய்யவில்லை என சத்தியம் செய்யக் கூறியதும் அதனை ரிஷாத் பதியுதீன் மறுத்ததும் ரிஷாதிற்கு மறந்தாலும் மக்கள் அதனை மறக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இப்போது காடழிப்பு ஊழல், இனமாதம் மதவாதம் இவை யாவும் மறக்கப்பட்டதா என நினைவுபடுத்துகிறோம்.