follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் கொடூரம் : 4 பெண்களை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்ற கும்பல்

பாகிஸ்தானில் கொடூரம் : 4 பெண்களை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்ற கும்பல்

Published on

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண் உட்பட 4 பெண்கள், சந்தை ஒன்றி திருடிய  குற்றச்சாட்டில் ஓரு கும்பல் அவர்களை பிடித்து கடுமையாக அடித்து உதைத்தனர். ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தினர். அப்போது, ஆடைகளை தரும்படி பெண்கள் கதறிய போதும், அந்த கும்பல் அதனை கண்டு கொள்ளாமல் தடியினால் கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் தங்களை விட்டு விடும்படி அந்த பெண்கள் கதறிய போதும் சந்தையில் உள்ள  ஒருவரும் பெண்களுக்கு உதவ முன்வரவில்லை.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண்கள் வீதியில் நிர்வாணமாக கிடந்தனர். இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது அதிகம் பரவ தொடங்கியதால், பொலிஸாரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து முக்கிய குற்றவாளிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கையில், அந்த சந்தையில் கழிவுகளை சேகரிக்க சென்றோம். தாகம் எடுத்ததால், அருகில் இருந்த மின்சார பொருட்கள் கடைக்கு சென்று தண்ணீர் கேட்ட போது, கடை உரிமையாளர் சதாம் உட்பட சிலர் நாங்கள் திருட வந்ததாக குற்றஞ்சாட்டி, தாக்கினர். எங்களது ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். அங்கிருந்த ஒருவரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

முக்கிய குற்றவாளி சதாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த பொலிஸார், இன்னும் சிலரை தேடி வருகின்றனர். பெண்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீப்பற்றி எரிந்த அமரிக்கா விமானம்

Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம்...

இன்ஸ்டாவில் 17 மில்லியன் Followers பெற்ற முதல் ஐ.பி.எல் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி...

பாகிஸ்தான் ரயில் கடத்தல் – பணயக்கைதிகள் அனைவரும் மீட்பு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர்...