இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா, களுத்துறை கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, கலவானை மற்றும் எலபாத்த ஆகிய பிரதேசங்களுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.