துருக்கி பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சி – ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலின் போது இரண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒரு பெண் உறுப்பினரும் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் சபாநாயகர் 3 மணிநேரம் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.