இன்று அதிகாலை 1 மணிவரையான காலப்பகுதிக்குள் காலி – நெலுவ பகுதியில் 191.5 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் 177 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.