கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் குறித்த பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பல இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.