பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவூதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.
சவூதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோக்ஜி, அக்டோபர் 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சவூதி அரேபியாவின் முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை, நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப்பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.