follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP1குரங்கம்மை வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை விரைவில் வௌியிடப்படும்

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை விரைவில் வௌியிடப்படும்

Published on

குரங்கம்மை வைரஸ்(Mpox) தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று தொடர்பில் உலகளாவிய ரீதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

Mpox வைரஸ் தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளது.

குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

7 மணிநேர வாக்குமூலம் – CIDயிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார்...