ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
“இந்த ஜனாதிபதி காலத்தில், வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சில பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும்
மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்து உரிய நேரத்தில் அறிவித்து, அந்தக் கூட்டங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.