தாம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் கட்சி பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ் கட்சி சார்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் வைத்து சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாகாண சபை முறைமையை பயன்படுத்தி அந்த மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட படையணியை அமைத்து தனது நேரடிக் கண்காணிப்பில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு சஜித் பிரேமதாச கோரிய போதிலும் கலந்துகொண்ட தமிழ் கட்சி பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.