follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2திவாலாகும் பங்களாதேஷ்! பொருளாதார நெருக்கடிக்கு இடையே கரையும் அந்நிய செலாவணி

திவாலாகும் பங்களாதேஷ்! பொருளாதார நெருக்கடிக்கு இடையே கரையும் அந்நிய செலாவணி

Published on

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்பிறகு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பங்களாதேஷ் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதோடு, அந்நிய செலாவணி கையிருப்பு சரிய தொடங்கி உள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் அந்த நாடு ‛திவால்’ நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் என்பது கடந்த மாதம் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த அரசுக்கு தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கூட தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் ஆங்காங்கே சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடங்கி உள்ளன.

இதனால் 7 லட்சம் இந்துக்கள் டாக்கா உள்பட 2 இடங்களில் கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்து கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளனர்.

இதனால் இன்னும் பங்களாதேஷின் நிலைமை என்பது முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து பதற்றம் என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் தான் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பங்களாதேஷின் புள்ளியியல் முகமை சார்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி நுகர்வோர் விலை குறியீடு (பணவீக்கம்) என்பது ஜூலை மாதம் 11.66 சதவீதத்தை தொட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவு பணவீக்கம் என்பது 13 ஆண்டு இல்லாத அளவுக்கு 14 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று டெய்லி ஸ்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த பணவீக்கத்துக்கு பங்களாதேஷில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தான் காரணம். மாணவர்களின் தொடர் போராட்டம் என்பது பங்களாதேஷை முழுமையாக பாதித்தது. மேலும் பங்களாதேஷின் சென்ட்ரல் வங்கியின் தரவுப்படி ஜூலை 31ம் திகதி பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 20.48 பில்லியனை அமெரிக்க டாலரை எட்டியது. இது முந்தைய மாதமாக ஜூன் மாதத்தில் 21.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஒரு மாதத்தில் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிக அமெரிக்க டாலர் காலியாகி உள்ளது.

இது பங்களாதேஷத்திற்கு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அந்நிதிய செலாவணி போதிய அளவில் கையில் இருந்தால் தான் பிற நாடுகளில் இருந்து வர்த்தகத்துக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வது, பெட்ரோல், டீசலை பெற முடியும். இதனால் பங்களாதேஷில அந்திய செலாவணி கையிருப்பை மேற்கொண்டு சரிய விடாமல் தடுக்க வேண்டும். மேலும் மத்திய வங்கியும் பணக்கட்டுப்பாட்டை விடுத்துள்ளது. மக்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுக்க முடியது. ஒரு நேரத்தில் பொதுமக்கள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். இதனால் நாட்டின் வணிக துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கமின்றி வணிக துறை செயல்பட்டு உள்ளது.

இதனால் இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி என்பது ஏற்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யூனுஸ் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலை சரி செய்ய கவனம் செலுத்துவது முக்கியமாகும். ஏனென்றால் நாட்டில் தற்போதைய நிலை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அந்த நாடு திவால் நிலைக்கு கூட செல்லலாம்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...