follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2நாட்டின் கல்வி முறையை முன்னேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்

நாட்டின் கல்வி முறையை முன்னேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் கல்விக்குக் கூட ஒத்துழைப்பு வழங்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருந்தது. அப்போது, ​​கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளை உள்ளடக்கிய கல்வி அமைச்சை பொறுப்பேற்குமாறு அப்போதைய பிரதமர் என்ற வைகயில் ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்ற ‘இலங்கையின் உயர்கல்வியை அபிவிருத்தியடைந்த தேசத்திற்கு மாற்றியமைத்தல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு, 14 மணி நேர மின்வெட்டு, காலதாமதமான பரீட்சைகள், சீருடை, பாடப்புத்தகங்கள் போன்ற பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், எமது அமைச்சரவை, அரச அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிபுணர்களின் ஆதரவுடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. இன்று, இலங்கை கல்வியின் எதிர்காலம் குறித்து ஆராய 750 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்று திரட்டியிருப்பதையிட்டு பெருமை கொள்கிறோம்.

பொதுக் கல்வி, தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்கும் மாற்றுவதற்கும் திட்டங்களை தயாரிப்பதற்குமான முக்கிய திருப்புமுனையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

ஜனாதிபதி, முன்னாள் உயர்கல்வி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் உப வேந்தர்கள், உப வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் (CVCD) உறுப்பினர்கள், அரச சார்பற்ற உயர்கல்வி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளனர்.

17 அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், 5 அரச உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் கல்வி முறையை முன்னேற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...