தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் குழுவின் தலைவர் எச். கே. கே. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அவர்களின் அடிப்படை நாளாந்த சம்பளம் 1350 ரூபாவாகும் எனவும், வினைத்திறனின் அடிப்படையில் 350 ரூபா மேலதிக ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.