follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது

தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது

Published on

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.

பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர் ஜயவர்தன , “எங்களுக்கு இந்த அரசாங்கம் பிடிக்கவில்லை. இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். ஆனால் நாம் அதை ஜனநாயகக் கட்டமைப்பில் செய்ய வேண்டும்” அதேபோன்று, “இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்” எனவே பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு நான் பூரண ஆதரவை வழங்குகின்றேன். இது எனக்கு விருப்பமான அரசாங்கமாக இல்லாவிட்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்று அவர் கூறினார். அன்றிலிருந்து இன்று வரை எங்களிடம் அந்த கட்டமைப்பு உள்ளது.

1989 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அனுருத்த ரத்வத்த ஆகியோர் ஜனாதிபதி பிரேமதாசவைச் சந்தித்து “எங்களுடைய முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குகிறோம்” என்று அறிவித்தனர். அதுதான் நமது வரலாறு.

நீங்கள் 2022 ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதினால், 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இந்த நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

பியூமியிடம் மீண்டும் விசாரணை

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம்...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...