ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுக இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவிக்கவுள்ளார்.
நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கியதும் சொக்கா மல்லி என அழைக்கப்படும் அவர் இந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.