follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1பாடசாலை மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த பேரூந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது

பாடசாலை மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த பேரூந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது

Published on

எட்டாம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேரூந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரும், தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், குறித்த மாணவியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் மாணவி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதும், வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக மாணவி பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தனியார் பேரூந்து நடத்துனர் மாணவியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தமித் ஜயதிலக, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஹொரணையில் உள்ள மேற்படி நடத்துனரின் வீட்டில் மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரெமுன பிரதேசத்தில், மாணவியை ஏமாற்றி தடுத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் நடத்துனர் பற்றிய தகவல் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் மாணவியிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் மாணவியை நடத்துனர் கடத்திச் செல்வதற்கு முன்னர் குறித்த மாணவி பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

பிரதேசத்திலும் வீட்டிற்கு அருகாமையிலும் உள்ள இடங்களில் குறித்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவி தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் வழிகாட்டலின் கீழ் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியக கட்டளைப் பரிசோதகர் மஹேஷிகா தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி

இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ...

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...