follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ருமேனியா

இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ருமேனியா

Published on

இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில்ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ருமேனியா பணிக்காக தற்போது வரையில் சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும்  நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார். இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும் ருமேனிய வேலைகளுக்காக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும் தொகையை அறவிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும்,   ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...

உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்...

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...