“தீவிர சிகிச்சைப் பிரிவில்” சிகிச்சை பெற்று வரும் “இலங்கை தாய்” என்ற நோயாளியை குணப்படுத்தும் “சிறந்த வைத்தியம்” உள்ள “சிறந்த மருத்துவரை” தேர்வு செய்ய இலங்கை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்காகவே சிறந்த தீர்வு சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான திலித் ஜயவீர ஜனாதிபதிப் போட்டிக்கு வந்துள்ளார் என சர்வசன அதிகார கூட்டணியின் நிறைவேற்று உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
திலித் ஜயவீர ஏன் ஜனாதிபதி போட்டிக்கு முன்னிளையாகிறார் என விமல் வீரவன்ச தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“..யுனிவர்சல் பவர், தேசிய ஒற்றுமையை வளர்க்கும், நவீனத்துவத்தை மேம்படுத்தும், அனைவருக்கும் டிஜிட்டல் எண்ணை வழங்கும் – அதன் மூலம் திருட்டை நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதித் தேர்தல் போரில் திலித் ஜயவீர களமிறங்கியுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தாயை குணப்படுத்த அனைவருக்கும் பழக்கப்பட்ட சின்னத்தின் கீழ் திலித் ஜயவீர களமிறங்குவது நான்காவதோ, மூன்றாவதோ, இரண்டாவதோ வருவதற்காக அல்ல, முதலாவதாக வந்து எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் அவரது தீர்வைச் செயல்படுத்தும் முதல் நபராக இருக்கவாகும்.
இக்கட்டான நேரத்தில் துடுகெமுனு மன்னன் பத்துப் பெரும் பூதங்களுடன் வந்து நாட்டைக் காப்பாற்றியதைப் போல, இந்தக் கடினமான நேரத்தில் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய சர்வசன அதிகார கூட்டணி அந்த இக்கட்டான சவாலை முறியடிக்க அணிதிரண்டு ஒன்றுபட்டுள்ளது…”