follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP2தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

Published on

தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த செயின்ட் மார்ட்டின் தீவுகளின் மீது இறையாண்மையை வழங்கியிருந்தால், தான் தொடர்ந்தும் பதவியில் இருந்திருக்க முடிந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு முதல் முறையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டில் வன்முறைகள் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பதற்காகவே தனது இராஜினாமா என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, தீவிரவாதிகளிடம் விழ வேண்டாம் என்று பங்களாதேஷ் மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் அடையாளம்

இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர்...

போக்குவரத்து அபராதம் செலுத்த Govpay செயலி அறிமுகப்படுத்த தீர்மானம்

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக GovPay செயலி மூலம் செலுத்தக்கூடிய வகையிலான ஒரு...