தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் எம்பிலிப்பிட்டியவில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.