சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் துப்பாக்கி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிடுகின்றார்.
இந்த நாட்டில் விவசாயிகளின் பயிர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் பல்வேறு வன விலங்குகளினால் அழிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை விவசாயிகளுக்கு குறுகிய கால திட்டமாக துப்பாக்கி வழங்கப்படும் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.