follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1'பட்டினி என்பது கட்சி சார்பற்றது' - ஜனாதிபதி

‘பட்டினி என்பது கட்சி சார்பற்றது’ – ஜனாதிபதி

Published on

எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது கட்சி சார்பற்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருக்குமாறு இலங்கையின் முழு பெண் தலைமுறையினரிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இன்று (09) இடம்பெற்ற “பெண்களின் சக்தி” என்ற தலைப்பிலான பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் தாய்மார்களுக்கு உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் தவிப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அன்றைய மேடைகளில் தேசப்பற்றையும் மக்களின் துன்பங்களையும் பற்றி பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுத்து ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கடினமான பொருளாதார நிலைமை இருந்த போதிலும், இந்த நாட்டில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க சட்ட கட்டமைப்பை அமைத்தல் உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,

“.. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் பசி என்பது கட்சி சார்பற்றது.. நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு பசி இருக்கிறது.. வயிற்றை நிரப்புவது அல்ல. -கட்சிக்காரன்.. அதனால்தான் அரசியல் கட்சி நிறங்களை ஒதுக்கிவிட்டு நாட்டு மக்களின் வயிற்றை நிரப்ப ஒன்று சேர்ந்தோம்.

எரிபொருளும், உணவும் இன்றி நீங்கள் அனைவரும் பெரும் சிரமத்தை அன்றைய தினம் எதிர்கொண்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும்.. மற்றவர்கள் அந்த பொறுப்பை ஏற்காததால் நான் ஜனாதிபதியானேன்.. ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஒரு வேண்டுகோள் “இந்த கஷ்டங்களில் இருந்து மக்களை மீட்டெடுப்போம்” என்று உறுதி பூண்டேன்.

சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க அவர்கள் மறுத்துவிட்டனர். வெளிநாடுகளில் இருந்து மூன்று பெண்கள் எனக்கு நாட்டை முன்னேற்ற உதவினார்கள்.. இந்த மூவரின் உதவி இல்லையென்றால் இன்று இந்த நிலையை எங்களால் அடைந்திருக்க முடியாது.. இந்த கடினமான பயணத்திலும் நான் மறக்கவில்லை. இந்த நாட்டுப் பெண்களே.. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைத்துப் பெண்களுக்கும் இந்த உரிமைகளை வழங்குவதற்காக நாம் இப்போது முதல் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்…”

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான மகளிர் அமைப்புக்கள் மற்றும் கிளைச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதிமொழி எடுத்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...