ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (9) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 7ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த போதிலும், அதனை இன்று (9) நள்ளிரவு 12 மணி வரை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு தபால் மூல தேர்தல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று இரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.