ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் கூட்டணியாக இணைந்த கட்சிகள் பலதும் இணைந்து கொண்டிருந்தன.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இன்றைய விழாவில் பங்கேற்றிருந்த நிலையில், அதன் தலைவர் ரவுப் ஹகீம் உரையாற்றுகையில், அன்று அஷ்ரப் அவர்கள் பிரேமதாச ரணசிங்கவை ஜனாதிபதியாக்க உறுதுணையாக இருந்ததாகவும் இன்று நாம் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க உறுதுணையாக இருப்பதாகவும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எம். எஸ். தௌபீக் மட்டுமே கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுடன் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்திருந்த போதிலும், இன்றைய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹரீஸ் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.