follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் காப்பாற்றியது ரணில்

எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் காப்பாற்றியது ரணில்

Published on

பொருளாதாரம் சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் பொறுப்பேற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் நாட்டைக் காப்பாற்றியதாக அவர் வலியுறுத்துகிறார்.

நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதித் தலைவர் கூறினார்.

“ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி லொரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மேலும் கூறியதாவது,

“நாட்டைப் பற்றி சிந்தித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே அவரது நம்பிக்கை.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக ஆறு முறை பதவி வகித்தார். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் கட்சியைக் காக்க பாடுபடாமல் நாட்டைப் பற்றியே சிந்தித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் சில சலுகைகளைப் பெறுவதற்கு எமது கட்சி உறுப்பினர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்நாட்டின் பொருளாதாரம் உடைந்திருந்த கால கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

2001ஆம் ஆண்டு பிரதமராக ஆட்சியமைத்து முன்னோக்கிச் சென்ற போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரால் தனது நம்பிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அவரது அரசாங்கம் வீழ்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்மறைப் பொருளாதாரம் நேர்மறைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டபோது மற்ற கட்சிகள் அவரது பயணத்தைத் தோற்கடித்தன.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு புலிகள் தடையாக நின்றார்கள். வடக்கு மக்களை பலவந்தமாக வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார வேலைத்திட்டம் வலுவாக இருந்த காலத்திலும் ஈஸ்டர் தாக்குதலால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு இந்த நாடு எப்படி வங்குரோத்து என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் மீண்டும் வங்குரோத்தாகி இருந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றினார். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவருடைய வேலைத்திட்டத்தை தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு செயற்பட்டார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை நியமித்தாலும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை நாம் அறிவோம். அவரது வெற்றி நிச்சயம்.

ஐக்கிய தேசிய கட்சியின் வரையறுக்கப்பட்ட குழு எங்களிடமிருந்து விலகிச் சென்றுள்ளது. இந்த நாட்டை சரியான இடத்திற்கு கொண்டு வரவும், இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி நன்மைகளை பெறவும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு கட்சியினரை கேட்டுக்கொள்கின்றோம்.

ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தனி நபராக ஒரு ஆசனத்தைப் பெற்று நாட்டின் தலைவரானார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பலர் தற்போது அவர் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை சரியென ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்று ரணில் விக்கிரமசிங்கவை எமது தரப்பிலிருந்து பாதுகாத்த அணியினர் இன்று குற்றம் சுமத்துகின்றனர். இது போன்ற செயல்கள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக செய்யப்படுகின்றன.”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...