follow the truth

follow the truth

January, 15, 2025
Homeலைஃப்ஸ்டைல்இரவு உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா..?

இரவு உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா..?

Published on

உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம்மில் பல மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிலருக்கு உடல் எடையானது குறையவே குறையாது. இதனால் அடுத்தக்கட்டமாக உணவு கட்டுப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை குறைக்க வேண்டும் என்ற முறையில் சிலர் காலை உணவு உண்பதை தவிர்க்கிறார்கள்.

இன்னும், சிலர் இரவு உணவை தவிர்க்கிறார்கள். சிலரோ நாள் முழுவதும் உணவு உண்ணாமல் விட்டுவிடுகிறார்கள். மொத்தத்தில் குறைவான உணவு உண்பதால் உடல் எடை குறையும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறானது இதற்கு பதிலாக நீங்கள், பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன பாதிப்புகள் என்பதை பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு அல்லது வாயு பிரச்சினை:
இரவு நேரத்தில் உணவு உண்பதை தவிர்ப்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாயு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது உங்கள் செரிமான அமைப்பு பல மடங்கு பாதிக்கும் தன்மை கொண்டது.

உடல் பலவீனமடையும்:
நீங்கள் இரவு உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இதனால் உங்கள் உடல் பலவீனமடைகிறது. பலவீனத்தால் எளிதில் சோர்வடைகிறீர்கள்.

தூக்க சுழற்சி பாதிக்கப்படும்:
இரவு நேரத்தில் சாப்பிடாமல் உறங்கினால், உங்களின் இயல்பான தூக்க சுழற்சி பாதிக்கப்படும். இதனால் இரவில் தூக்கம் வராமல் எரிச்சலான மனநிலை இருக்கும். நீரழிவு நோயாளிகள் அல்லது ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் இரவு உணவை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில், இது உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைப் பாதிக்கிறது. எனவே, மொத்தத்தில் நாம் ஆரோக்கியமாக நலமுடன் வாழ மூன்று வேளை உணவு சாப்பிடுவது அவசியம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக்...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய...