தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை தபால் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிய தேர்தல் அதிகாரிகளிடம் வழங்குவதே பொருத்தமானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடையும்.
இதன் விளைவாக, அந்த திகதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என அங்கு தெரிவிக்கப்பட்டது.